EPFO: பிஎப் பேலன்ஸை எளிதாக தெரிந்துகொள்வது எப்படி?

வேலை செய்யும் நிறுவனம் உங்கள் பிஎப் கணக்கில் சரியாக அவர்களது பங்களிப்பை செலுத்துகிறதா?


ஒரு நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர் அவரது பிஎப் கணக்கில் உள்ள பேலன்ஸை அறிந்துகொள்வது மிகவும் எளிமையாகியுள்ளது.

ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதி ஆணையத்தின் (EPFO - Employees' Provident Fund Organisation) உறுப்பினர் மற்றும் ஒரு நிறுவனத்தின் ஊழியராக இருக்கும் போது, வேலை செய்யும் நிறுவனம் உங்கள் பிஎப் கணக்கில் சரியாக அவர்களது பங்களிப்பை செலுத்துகிறதா என்பதை எப்போது வேண்டுமானாலும் எங்கு இருந்து வேண்டுமானாலும் இணையம் அல்லது மொபைல் எஸ்எம்எஸ் மூலம் தெரிந்துகொள்ள முடியும்.

உமங் ஆப்





உமங் ஆப் மூலம் பிஎப் பேலன்ஸை எளிமையாக மொபைல் போன் மூலம் அறிந்துக்கொள்ள முடியும். உங்கள் ஸ்மார்ட்போனில் உமங் செயலியை பதிவிறக்கம் செய்து, பிஎப் பாஸ்புக்கை பார்ப்பது மட்டுமல்லாமல், தேவைப்பட்டால் எளிமையான வழிகளில் பணத்தைத் திரும்பவும் பெற முடியும். இதைச் செய்ய செயலியைப் பதிவிறக்கம் செய்த பிறகு மொபைல் எண் உள்ளிட்ட விவரங்களை அளித்துப் பதிவு செய்திருக்க வேண்டும்.

ஈபிஎப்ஓ இணையதளம்


பிஎப் சந்தாதார்கள் https://unifiedportal-mem.epfindia.gov.in/memberinterface/ என்ற இணைப்பிற்குச் சென்று தங்களது யூஏஎன் எண்ணை ஆக்டிவேட் செய்ய வேண்டும். யூஏஎன் ஆக்டிவேட் செய்யப்பட்ட 6 மணி நேரத்திற்குப் பிறகு https://www.epfindia.gov.in/site_en/index.php என்ற இணைப்பிற்குச் செல்ல வேண்டும்.

ஈபிஎப்ஓ இணையதளத்திற்குச் சென்ற பிறகு “For Employees” கீழ் உள்ள “Our Services" என்பதைக் கிளிக் செய்ய வேண்டும். பின்னர் ‘Services’ கீழ் உள்ள 'Member Passbook' என்பதைக் கிளிக் செய்த உடன் புதிய பக்கம் ஒன்றுக்குச் செல்வீர்கள். (நேரடியாகச் செல்ல: https://passbook.epfindia.gov.in/MemberPassBook/Login.jsp)

இந்தப் பக்கத்தில் உங்களது யுஏஎன் எண் மற்றும் கடவுச்சொல்லை உள்ளிடுவதன் மூலம் பிஎப் பாஸ்புக்கை பதிவிறக்கம் செய்துகொள்ள முடியும்

எஸ்எம்எஸ் மூலம் பிஎப் பேலன்ஸை செக் செய்வது எப்படி?

ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதி ஆணையத்திடம் உங்களது யுஏஎன் பதிவு செய்யப்பட்டு இருக்கும் போது 7738299899 என்ற எண்ணுக்கு EPFOHO <UAN Number> TAM உள்ளிட்ட விவரங்களை எஸ்எம்எஸ் ஆக அனுப்ப வேண்டும். இப்படிச் செய்யும் போது பிஎப் பேலன்ஸ் தமிழில் கிடைக்கும். இதுவே TAM பதிலாக ENG என டைப் செய்தால் ஆங்கிலத்தில் விவரங்களைப் பெறலாம்.

மிஸ்டு கால் மூலம் பிஎப் பேலன்ஸை பெறுவது எப்படி?

ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதி ஆணையத்திடம் உங்களது யுஏஎன் பதிவு செய்யப்பட்டு இருக்கும் போது 011-22901406 என்ற எண்ணுக்கு மிஸ்டு கால் அளித்துப் பிஎப் பேலன்ஸை பெறலாம்.

ஈபிஎப்ஓ ஆப்

ஈபிஎப்ஓ ஆப் மூலமாகவும் பிஎப் பேலன்ஸை எளிமையாகச் செக் செய்ய முடியும்.

குறிப்பு: இப்படி எளிமையாக உங்கள் பிஎப் பேலன்ஸை பெற வேண்டும் என்றால் பிஎப் கணக்கின் யுஏஎன் எண் ஆக்டிவேட் செய்யப்பட்டு இருக்க வேண்டும். மொபைல் எண், ஆதார் எண் உள்ளிட்டவை பதிவு செய்யப்பட்டு இருக்க வேண்டியது அவசியம்.

Post a Comment

0 Comments